இலங்கை

குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர் நிர்கதியான மூன்று பெண் பிள்ளைகள்

பயிற்றங் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய இராசமணி ஸ்ரீகாந்தன் என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

மேற்படி குடும்பத்தர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 22 ஆம் திகதி பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றைக் கொடிக்கு குத்துவதற்காக பூவரசம் தடி வெட்டியுள்ளார்.

நீண்டு வளர்ந்திருந்த பூவரசம் தாடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார்  நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையான மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…