இலங்கை

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (20) கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், முன்னாள் அமைச்சரை கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு, விசேட வைத்தியரின் பரிசோனையைத் தொடர்ந்து, அவரை மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…