கிரிக்கட்விளையாட்டு

விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக கப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸில் முறைப்பாடளித்துள்ள சமூக ஆர்வலர் எச்.எம். வெங்கடேஷ் என்பர் ஐபிஎல் மூலம் விராட் கோலி சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவதற்கு தூண்டிய விராட் கோலி இந்த துயரத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் என்றும் அவர் முறைப்பாடளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த முறைப்பாடு ஏற்கனவே உள்ள வழக்கின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும், சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…