No products in the cart.
ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக முதல் முறையாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். இதில், மூன்று வேடங்களில் அதாவது வெற்றிமாறன், வெற்றி, வைத்தியராக மாறன் ஆகிய கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார்.
வெறித்தனமான ட்ரீட்
இந்நிலையில், விஜய் பிறந்தநாள் அன்று ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது, அவரது வெற்றி படங்களில் ஒன்றான மெர்சல் திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் திகதி கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு இது பெரிய ட்ரீட் ஆக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.