No products in the cart.
துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை குற்றவியல் முறையில் தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துசித ஹல்லொலுவ இன்று (ஜூன் 13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.