No products in the cart.
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
சமீபத்தில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3 கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் கூறுகையில், அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்தார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட எச். எம். பி. அபேகோன் மேலும் தெரிவித்தார்.
அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, கரையொதுங்கும் பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.