இலங்கை

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கையில் தற்போது உள்ள இஸ்ரேலிய சேவையாளர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதால், திட்டமிடப்பட்ட திகதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாவிட்டால், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மறு நுழைவு விசா காலாவதியானால், அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாது என்பதால், இன்றைய தினத்திற்குள் (15) அது குறித்து தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா கோரியுள்ளார்.

மறு நுழைவு விசா காலத்தை நீட்டிப்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், எனவே தற்போது நாட்டில் உள்ள இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் பணியாளர்கள் தொடர்புடைய விபரங்களை இன்று பின்வரும் தொலைபேசி எண்களுக்கு வட்ஸ்சப் மூலம் அனுப்புமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுர் மேலும் அறிவித்துள்ளார்.

071-844 73 05, 071-683 35 13 அல்லது 071-974 2095

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…