No products in the cart.
கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்
அல்பெர்டாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நாளை ஆரம்பமாகும் G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சந்திக்க உள்ளனர்.
பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தலைவர்கள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்கள் திரளும் இம்மாநாட்டின் தொடக்க நாளிலேயே நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மார்க் கார்னி மற்றும் டொனால்ட் டிரம்ப் இருவரும் இன்று மாலை அல்பெர்டா மாகாணத்தை அடைய உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் சந்திப்பு கனாடா-அமெரிக்க உறவுகளில் புதிய கட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.