இலங்கை

பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை  கைது செய்து ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால், மேலும் பிடியாணைகளைப் பிறப்பிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். எஸ் சபுவித  சுட்டிக்காட்டியதோடு  பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவருக்கு பிடியாணை  பிறப்பிக்க வேண்டும் என்ற சட்டமா அதிபரின் கோரிக்கையை  திங்கட்கிழமை  (17)  அன்று நிராகரித்தார்.

சாட்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அரசுத் தரப்பு பொறுப்பு என்பதை வலியுறுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் இந்த நாடு எங்கே போகும் என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றிருந்த  மதுரங்க என்ற பொலிஸ்  சாட்சிக்கு இவ்வாறு பிடியாணை  நிராகரிக்கப்பட்டது. 

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…