இலங்கை

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை எளிதாக்க இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் எந்தவொரு இலங்கையரும் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை டெலிகிராம் சேனல் அல்லது பின்வரும் அவசர எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தொ. இல – +98 901 014 4557, + 98 912 810 9115, + 98 912 810 9109

அத்தோடு, உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தையும் பின்பவரும் எண்களின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

தொ.இல – +98 939 205 5161 + 98 991 205 7522 (சிங்களம்/ஆங்கிலம்) + 98 936 636 0260

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…