No products in the cart.
பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார்
பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார்
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த பகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் பேருந்தை சாரதியின் உதவியாளரே செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல் பகுதியில் மின்கம்பத்துடன் மோதி நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 03 உயிரிழந்ததுடன் மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளானவர்கள் அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நேற்று அதிகாலை பதுளை முத்தியங்கன விகாரையில் வழிபாடு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை எதிர்கொண்டனர்.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன், பதுளை ஆதாரவ வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் உடனடியாக செயற்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசாரணையில், விபத்து நேரத்தில் பேருந்தை சாரதியின் உதவியாளரே செலுத்தியிருந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.