இலங்கை

நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த சிறிவர்தன குறித்த பதவியை சமீபத்தில் இராஜினாமா செய்ததோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக இயக்குனராக பதவியேற்கவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன சூரியப்பெரும, தற்போதைய அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றியதோடு, மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நிதி அமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்பதற்காக கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…