கிரிக்கட்விளையாட்டு

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக!

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இரண்டு வருட ஐபிஎல் தடையை எதிர்கொண்டுள்ள ஹாரி புரூக்கிற்கு மாற்றாக ஷானக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அண்மையில் முடிவடைந்த ஐஎல் டி20 போட்டியில் துபாய் கேபிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில்  தசுன் ஷானக முக்கிய பங்கை வகித்திருந்தார்.

போட்டியில் அவரது சிறப்பான ஆட்டமே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அவரை தேர்வு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தசுன் ஷானக தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் பயிற்சி பெற்று வருகிறார். அவர் சேர்க்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…