சினிமா

அடேங்கப்பா, இத்தனை கோடிகளா?

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழை விட தெலுங்கில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. சில நாட்களில் படம் 100 கோடி ரூபாவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தெலுங்கிலும் தனுஷிற்கு கணிசமாக மார்க்கெட் அதிகரித்துள்ளது. தற்போது தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படமும் ஹிட்டானால் அவரது சம்பளம் 50 கோடி ரூபா வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

தமிழில் 50 கோடி சம்பளத்தை தாண்டியவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என இன்னும் சிலர் மட்டுமே. இதனால் இந்த பட்டியலில் தனுசும் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…