இந்தியா

திருப்பதி கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் பலி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகே பள்ளியை சேர்ந்த 13 பேர் திருப்பதி கோவிலுக்கு வந்தனர்.

நேற்று (29) மாலை தரிசனம் முடித்து பின்னர் வேனில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

அவர்கள் வந்த வேன் இன்று (30) அதிகாலை அன்னமைய்யா மாவட்டம், குரு பல கோட்டா, சென்ன மாரி மிட்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் வேனில் இருந்த மேகர்ஸ் (வயது 17), சரண் (17), ஸ்ரவாணி (28) ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொலிஸார் விபத்தில் சிக்கிய வேனை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…