No products in the cart.
ராகம பகுதியில் 15 பேர் கைது!
ராகம படுவத்த பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் மது அருந்தி வாகம் செலுத்தியமை போன்ற காரணங்களால்
15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து
அனைத்து சாலைகளிலும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 ஆம் திகதி ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்தப் பகுதிகளில் திடீர் ஆய்வு உட்பட தேடுதல் நடவடிக்கையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது..