சினிமா

தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கரின் மகள்

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் களமிறங்கி தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் ரோபோ ஷங்கர்.

வெள்ளித்திரையில் நடிக்க களமிறங்கியவர் அடுத்தடுத்து நிறைய வெற்றிப் படங்கள் நடித்தார், முன்னணி காமெடி நடிகராகவும் முன்னேறினார். இடையில் உடல்நலக் குறைவால் கேமரா பக்கம் வராமல் இருந்தவர் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்.

இவரது மகள் இந்திரஜாவும் பிகில் படம் மூலம் களமிறங்கி சில படங்கள் நடித்தார். சில வருடம் முன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்திரஜா மற்றும் கார்த்திக் அண்மையில் தங்களது யூடியூப் பக்கத்தில், தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கூறியிருந்தனர்.

அதேபோல் மத்திய அரசு மூளை செயல்படுத்துதல் பயிற்சி முறைக்காக தனியாக பட்ஜெட் ஒதுக்கியுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், குழந்தை பிறந்தவுடன் கூட அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது எனவும் இந்தரஜா தம்பதியினர் கூறியிருந்தனர்.

தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைத்துவிட்டது என கூறப்படுவது ஆதாரமற்றது.

ஹெகுரு பயிற்சி தொடர்பாக ரோபோ சங்கர் மகள் வெளியிட்ட வீடியோவில் பல தவறான தகவல்கள் இருப்பதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…