இலங்கை

தமிழ்நாடு வைக்கும் அதே கோரிக்கை-டிரம்ப் கொண்டு வரும் சட்டம்

அமெரிக்காவில் கல்வித்துறை மாகாண அரசுகளிடம் மொத்தமாக ஒப்படைக்கும் முடிவை அதிபர் டிரம்ப் எடுக்கிறார். தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக வைக்கப்படும் இந்த விஷயத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கே இன்று நிறைவேற்ற உள்ளார். இதற்கான அவசர சட்டத்தை அவர் இன்று கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசு கல்வித்துறை மாநில பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. இப்போது.. அமெரிக்காவில் கல்வித்துறையை மாகாண பிரிவிற்கு மாற்ற டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் கல்வி என்பது பொதுப் பிரிவில் உள்ளது. அதாவது மாநில மற்றும் மத்திய பிரிவு இரண்டிலும் கல்வி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் கல்வியை முழுக்க முழுக்க மாநில பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. எமர்ஜென்சி காலத்தில் கல்வி இப்படி பொதுப்பட்டியலுக்கு சென்றது. இதை தமிழ்நாடு அரசுகள் இத்தனை காலமாக எதிர்த்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் என்று முக்கிய கட்சிகள் கல்வியை மாநில பிரிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகமும் இதே கோரிக்கையை கொள்கையாக அறிவித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக இந்த விஷயத்தை அமெரிக்க அதிபராகி இருக்கும்.. டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளார். அதன்படி அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளாராம். அனைத்து கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளாராம்.

தேசிய அளவில் அங்கே ஒரு கட்சி வென்றால்.. அந்த கட்சிதான் கல்வி கொள்கையை மாற்றுகிறது. இப்போது உதாரணமாக பிடன் வென்ற போது நாடு முழுக்க கல்வி நிறுவனங்களில் ஜனநாயக கட்சி கொள்கையை கொண்டு செல்லப்பட்டன. இது டிரம்பின் குடியரசு கட்சிக்கு சிக்கலாக அமைந்தது. முக்கியமாக குடியரசு கட்சி வலுவாக இருக்கும் சிவப்பு மாநிலங்களில் கூட ஜனநாயக கட்சியின் கொள்கைகள் திணிக்கப்பட்டன. இதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளாராம். அனைத்து கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளாராம். எதிர்காலத்தில் ஜனநாயக கட்சி வென்றால் கூட.. குடியரசு கட்சி மாநிலங்களில் எந்த விதமான கல்வி ரீதியிலான மாற்றங்களையும் செய்ய கூடாது என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதை தேர்தலின் போதே வாக்குறுதியாக டிரம்ப் அறிவித்து இருந்தார். டிரம்பின் அஜெண்டா47 பிரச்சாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல் பள்ளிகளில் இடதுசாரி கொள்கைக்கு அனுமதி இருக்காது. அது தொடர்பாக கல்வி முறைகளை கொண்டு வர தடை விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவிக்க உள்ளாராம்.

டிரம்ப்பின் குடியரசு கட்சி தற்போது அமெரிக்காவில் வலுவாக உள்ளது. முக்கியமாக ஒரு கவுண்டியில் கூட இந்த முறை கமலா ஹாரிஸ் டிரம்ப்பை விட அதிக வாக்குகளை வெல்லவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு வலதுசாரி கொள்கையை நாடு முழுக்க தீவிரமாக கொண்டு செல்ல டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு மாநில அளவில் பள்ளிகளில் மாநில நிர்வாகத்தின் பவர் இருக்க வேண்டும். இதற்காகவே கல்வியை மாநில பிரிவிற்கு கொண்டு செல்ல டிரம்ப் முடிவு செய்துள்ளாராம்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…