No products in the cart.
இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.