இந்தியா

யாழில் காணாமல் போனவர்கள் தமிழகத்தில் மீட்பு!

கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் தமிழக கடலோர காவல் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்தனர்.

கடந்த 15ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளனர் இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார் , இருவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேசமய்ம் மீனவர்கள் இருவரும் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…