சினிமா

சின்னத்திரை நடிகை கண்ணீர் மல்க புகார்

ராஜ்கண்ணன் தன்னை ஏமாற்றி தாலி கட்டியதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாகவும் சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

ரிஹானா பேகம் புகார் தொடர்பாக பூந்தமல்லி பொலிஸார் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

இருவரும் சட்டத்தரணிகளுடன் ஆஜரான நிலையில் பொலிஸார் தனித்தனியாக விசாரித்தனர்.

இருவரும் பணம் கொடுத்தது மற்றும் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பொலிஸார் சரிபார்த்துள்ளனர்.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் தீர்வு கண்டு கொள்வதாக கூறியதன் பேரில், இரு தரப்பினரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன். ஓட்டல் அதிபரான இவர், நடிகை ரிஹானா பேகம் தன்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…