No products in the cart.
கிங்டம் படத்தில் ஈழத்தமிழர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டனம்!
அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் கண்டனங்கள் வௌியிடப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படம் தொடர்பில் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.