சினிமா

சட்ட சபைத் தேர்தலுக்கு பின்னர் விஜயின் படம்?

நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி 2012ல் வெளிவந்த படம் ‛துப்பாக்கி. 

மிகப்பெரிய ஹிட்டான இப்படத்தின் 2வது பாகம் உருவாகுமா என விஜய் ரசிகர்கள் பலரும் பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர். 

ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. நடிகர் விஜயும், ‛ஜனநாயகன்’ படத்துடன் சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இறங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால் ‛துப்பாக்கி 2′ பற்றிய பேச்சுகளும் அடங்கின. 

இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து ‛மதராஸி’ படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸிடம், நீங்கள் இயக்கிய படங்களில் எந்த படத்தை 2வது பாகம் எடுக்க விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, துப்பாக்கி படத்தை தான் 2வது பாகம் எடுக்க விரும்புவேன் என்றார். 

இதன்படி ‛‛நான் எடுத்த படங்களிலேயே இரண்டாம் பாகம் எடுப்பதற்கான சிறந்த படம் துப்பாக்கி தான். அப்படத்தில் விடுமுறை முடிந்து விஜய் திரும்ப பணிக்கு செல்வார். 

அதை இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியாவில் தான் உருவாக்கினேன். திரும்பி விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நடக்கும் சம்பவங்களை வைத்து இரண்டாம் பாகம் கதையை உருவாக்கலாம் என்ற யோசனையில் தான் அப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருந்தேன். 

மேலும் படத்தில் சத்யன் கதாபாத்திரம் கூட, ‛ஒவ்வொரு விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதும் எதாவது ஒரு பிரச்னையில் சிக்க வெச்சிடுற’ என வசனம் பேசுவார். 

இதையெல்லாம் நான் வேண்டுமென்ற இரண்டாம் பாகத்திற்கான ஐடியாவிற்காக தான் வைத்திருந்தேன். எனவே துப்பாக்கி 2 படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும்”. இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார். 

இதனையடுத்து 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு மீண்டும் படம் நடிக்க விஜய் விரும்பினால், ‛துப்பாக்கி 2′ உருவாகலாம் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…