சினிமா

கதாநாயகனாக களமிறங்கும் ஆக்ஷன் கிங்

தமிழ் சினிமாவில் 90 – 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆக்ஷன் கிங் ஆக வலம் வந்தவர்தான் அர்ஜூன். 

150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக அர்ஜுன் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் மீண்டும் புதிதாக உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதனை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் என்பவர் இயக்குகிறார். 

இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‛விருமாண்டி’ அபிராமி நடிக்கிறார். இவர்களின் மகள் கதாபாத்திரத்தில் ‛ஸ்டார்’ படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார் 

அவர்களுடன் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கென், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் அர்ஜுன் கதாநாயகனாக நடிப்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…