விளையாட்டு

அணி தலைவர் பதவியில் இருந்து ரோகித் விலகல்?

இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா அணி தலைவராக செயற்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணத்தை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய அணி தலைவராக சுப்மன் கில் தேர்வானார்.

ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது தலைவராக இருக்கிறார்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி தலைவர் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யரை அணி தலைவராக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கிண்ண 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அதே நேரத்தில் அணி தலைவரான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு மீண்டும் திரும்பினார். அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு ஒருநாள் போட்டி அணி தலைவர் பதவியை கொடுத்து நீண்ட காலம் அவரை அந்த பொறுப்பில் அமர்த்த பி.சி. சி.ஐ. முடிவு செய்கிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க அனுமதிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்களது கடைசி போட்டியாக இருக்கும். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…