உலகம்

அமெரிக்காவுக்கான முக்கிய சேவையை நிறுத்திய இந்தியா

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 30 ஆம் திகதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக வருகிற 29ஆம் திகதி முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

800 அமெரிக்க டொலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது இரத்து செய்யப்படவுள்ளதாகவும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களுக்கு அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA)படி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 100 அமெரிக்க டொலர் வரையுள்ள பரிசுப் பொருட்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும்.

இதர பொருட்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்சல் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…