இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக விசேட நீதிமன்றம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், 

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு விசேட நீதிமன்றத்தை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளோம்.குறிப்பாக அவர்களை தண்டிக்க. 

ஒரு நாகரிக சமூகமாக, இந்த செயல்முறை சட்டத்தின் முன் நடைபெறுகிறது. 

தற்போது, பல விசேட மேல் நீதிமன்றங்களை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். 

முழு வீச்சில் நடைபெறும் இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத் தரவே” என்றார்.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…