இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை சீன ஜின்பிங்குடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்வதாக அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ரஷியா, சீனாவை எதிர்கொள்ள இராணுவ தயார்நிலையை கணிசமாக அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீனா, ரஷியா, வட கொரியா மூன்று நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு அமெரிக்காவிற்கு எதிராக வலுவடைந்து வருவதற்கான அறிகுறி என்று வொஷிங்டன் நம்புகிறது.
டிரம்ப்பின் உத்தரவுகளை பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து ஊகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “இந்த நடவடிக்கைகள் போரை நாடுவதற்காக அல்ல, மாறாக வீரர்களின் மன உறுதியை புதுப்பிக்க மட்டுமே.
துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன. இது அமெரிக்கத் தலைமை இல்லாததற்கான சான்றாகும்.
அதனால்தான் ஜனாதிபதி டிரம்ப் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தடுப்பு திறனை மறுசீரமைக்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நாங்கள் மோதலை விரும்பவில்லை. சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு நாங்கள் போரைத் தவிர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று கூறினார்.