ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் நேற்று 6ஆம் திகதி இந்த வெடிப்பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், T56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 17 தோட்டாக்கள் மற்றும் ஏனைய துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்கள் என்பன அப்பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு அருகில் புதிதாக வெட்டப்பட்ட கானில் இருந்து மீட்கப்பட்டுள்ளன