நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களை தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் இந்த போராட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது 25 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 633 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.