தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தான்.
ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதன்முறையாக இப்படம் தயாரானதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி இப்படம் வெளியாக கலவையான விமர்சனம் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
சமீபத்தில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி கூட சூப்பர் படம், நான் என்ஜாய் செய்தேன், என்னா ஆக்ஷன், நீங்கள் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டீர்கள் என பாராட்டியதாக சிவகார்த்திகேயன் பதிவு போட்டிருந்தார்.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல கலெக்ஷன் பெற்றாலும் சிவகார்த்திகேயனின் அமரன் பட வசூல் அளவு இல்லை. தற்போது வரை படம் தமிழகத்தில் 6 நாள் முடிவில் 5 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.