கொழும்பிலுள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பு கிராண்ட்பாஸ் – மோலவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

55 முதல் 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 4 அங்குலம் உயரமுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version