அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரை சந்தித்த கஜேந்திரகுமார்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அநுர அரசாங்கம் மிக விரைவில் கொண்டு வரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியலமைப்பின் ஆபத்துகள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.

Exit mobile version