வெளிநாட்டுப் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கை பொலிஸார்

ரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  (17.09.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த வெளிநாட்டுப் பெண் நேற்றைய தினம்  மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளார்.

இதன்போது அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் வெளிநாட்டுப் பெண்ணை காப்பாற்றி அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

Exit mobile version