கனடாவுக்குள் கொண்டு செல்லப்பட்டு வந்த 475.95 கிலோ கிராம் கோகெய்னை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தடுத்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அம்பாசெடர் Ambassador பாலம் அருகே இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்குரிய ஒரு டிரெய்லரை சோதனை செய்தபோது, பல பெட்டிகளிலும் இரண்டு டஃபிள் பைகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்மையான தூள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.