கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் காலமானார்!

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவால் காலமானார்.

அவர் இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹீல் முனசிங்க,
கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

47 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version