14 ஆம் லியோ திருத்தந்தைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய ஜனாதிபதி அழைப்பு

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (02) வத்திக்கானில் வைத்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழைக் கையளித்துள்ளார். 

வத்திக்கானின் அரசுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் மிஹைட்டா பிளாஜிடம் (Msgr. Mihăiță Blaj)  இந்த அழைப்பு கையளிக்கப்பட்டது.

Exit mobile version