தைவானின் அமைச்சரவை பிரசவத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிதாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் 100,000 புதிய தைவான் டொலர்கள் ($3,320) வழங்குகிறது என்று தைவான் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில் தைவானில் மக்கள் தொகை மிகக்குறைவாக காணப்படுகின்றது.
அதாவது கடந்த ஆண்டு நிலவரப்படி தைவானின் மொத்த மக்கள் தொகை 2½ கோடி ஆகும். எனவே நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க தைவான் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டம், சமூக காப்பீட்டு அமைப்புகள் முழுவதும் பிரசவ கொடுப்பனவுகளை தரப்படுத்துவதையும் அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், தாயின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து குடும்பங்களும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பணம் கொடுக்கப்படும்.
2021 முதல், சுமார் 60,000 தம்பதிகள் பயனடைந்துள்ளனர், இதன் விளைவாக 30,000 க்கும் மேற்பட்ட பிறப்புகள் நடந்துள்ளன.