துருவ் விக்ரமின் பைசன் ரிலீசுக்கு முன்பே இவ்வளவு லாபமா.. பிரம்மாண்ட வியாபாரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அடுத்து ஹீரோவாக நடித்து வரும் படம் பைசன் காளமாடன். மாரி செல்வராஜ் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

தீபாவளி ஸ்பெஷல் ஆக அக்டோபர் 17ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் பைசன் படத்தின் தமிழ்நாடு உரிமை, டிஜிட்டல் ரைட்ஸ் மிக பிரம்மாண்ட தொகைக்கு விலைபோயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு தியேட்டரிகள் உரிமை 15 கோடி ரூபாய்க்கு மினிமம் கேரண்டி அடிப்படையில் விற்கப்பட்டு இருக்கிறது. மேலும் டிஜிட்டல் உரிமை 18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

அதனால் தயாரிப்பாளருக்கு பைசன் ரிலீசுக்கு முன்பே பெரிய லாபம் கிடைத்து இருக்கிறது. 

Exit mobile version