வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இந்தப் பேச்சுவார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் இரு அமைச்சர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வுக்காக உலகத் தலைவர்கள் அமெரிக்காவில் கூடியிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கருக்கும் இடையே ஒரு சந்திப்பும் நடந்துள்ளது.