தனுஷ் தயாரித்து நடித்து வெற்றிமாறன் இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வடசென்னை.
இன்று வரை தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளை எங்கும் பார்த்தாலும், ரசிகர்களும் சரி, பத்திரிகையாளர்களும் சரி வடசென்னை 2 எப்போது என்று தான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு மக்கள் மனதை வென்ற வடசென்னை படம் குறித்து தனுஷ் மதுரையில் நடந்த ‘இட்லி கடை” படத்தின் பிரீ ரிலீஸ் விழாவில் பகிர்ந்துள்ளார்.
அதில், ” வட சென்னை 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும், படம் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.