2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான நட்பு, இன்றும் “ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது” என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஸென்ஹோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட சீன விஜயம் வெற்றியளித்துள்ளது.
எங்கள் இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமான முடிவுகளை எட்டினர். இது எமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு ஒரு புதிய மூலோபாய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சவால்கள் இருந்த போதிலும், இரண்டு நாடுகளும் பொதுவான இலக்குகளுடன் பிணைக்கப்பட்ட பங்காளிகள் என வர்ணித்த தூதுவர், சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, பரஸ்பர செழிப்பு, அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்த உறுதியளித்தார்.