கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த அமைச்சர்கள் உட்பட இருபது அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக குவித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, மகிந்த அமரவீர, பியசேன கமகே, பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன, துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சாகல ரத்நாயக்க, மனுஷ நாணயக்கார, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச, திஸ்ஸ குட்டியாராச்சி, மற்றும் குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட இருபது நபர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.