விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார். 

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு நிபணர்கள் விரைந்து சோதனை நடத்தினர். 

வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது. 

கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version