பொலிஸ் உத்தரவை புறக்கணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

இன்று அதிகாலை நிட்டம்புவ – உதம்மிட்ட பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

வாகனத்தில் பயணித்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர் .

கம்பஹா – பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் ஆய்வாளர் உட்பட அதிகாரிகள் குழு நிட்டம்புவ-கட்டுநாயக்க சாலையில் உள்ள உதம்மித சந்தி

சாலையில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேயங்கொடையிலிருந்து நிட்டம்புவ நோக்கி வான் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்தது வானை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சைகை செய்தபோது, ​​வான் நிறுத்தாமல் சென்றது.

இதனையடுத்து குறித்து வானை துரதை்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

வானில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version