அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்குக் கடந்த பாதீட்டின் போது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் மற்றுமொரு பகுதியை இம்முறை பாதீட்டில் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் மத்தியில் காணப்படும் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.