இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் நிர்வாண புகைப்படங்களை தயாரித்து இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக சி.ஐ.டியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர் தொடர்பாக தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.