பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆம் திகதிகளில் பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 14 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநிலத்தின் 243 இடங்களில், 121 இடங்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்பதுடன், எஞ்சிய தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டத்திலும் வாக்குப்பதிவு செய்யப்படும்.
அதிகபட்ச மக்கள் வாக்களிப்பதற்காக அரசியல் கட்சிகள் இந்த யோசனையை வலியுறுத்தியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 இலட்சம் பேர் இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்காளிக்க தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பீகார் சட்டப் பேரவை தேர்தல் திகதி அறிவிப்பு
