இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து நாளை எட்டாம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளது.
இந்த அமர்வில் பலர் கருத்து வெளியிடவுள்ளனர் குறிப்பாக மின்சார பவானையாளர் சங்கப் பிரதிநிதிகள் கருத்துரை வழங்கவுள்ளனர்.
“மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் 2025” என்ற தலைப்பிலான இந்த அமர்வு கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இல் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
மின்சார செயற்பாட்டு ஒழுங்குமுறை மற்றும் நுகர்வோர் ஈடுபாட்டு செயல்முறையின் ஒரு பகுதியாக, வரவுள்ள 2026 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட கட்டணங்களை திருத்தம் செய்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களை சேகரிப்பதே இந்த அமர்வின் பிரதான நோக்கமாகும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது .