கொழும்பில் பாதுகாப்பு பணியில் 6,000 காவல்துறையினர்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

இதற்காக சுமார் 6,000  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறியுள்ளனர். மேலதிகமாக, இலங்கை இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படை (STF) ஆகியவற்றின் பணியாளர்களும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் உதவுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவம் வீதித் தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தும், அதே நேரத்தில் காவல்துறையினர் சிவில் உடையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயுதம் ஏந்தியிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கியமான தகவல்களைச் சேகரிக்க புலனாய்வு அதிகாரிகளும் களத்தில் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளனர்.

Exit mobile version